Icon to view photos in full screen

"ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல உடல் ரீதியான பிரச்சினைகள் உள்ளவர்கள் வேலை வேட்டைக்குச் செல்லும்போது, நான் அவர்களை எனது ஸ்கூட்டரில் அழைத்துச் செல்கிறேன். ஆனால் எனக்கென்று ஒரு நிலையான வேலை இல்லை."

எங்கள் புகைப்படக் கலைஞர் விக்கி ராய் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றபோது, அனைத்து அருணாச்சலப் பிரதேச மாற்றுத் திறனாளிகள் இளைஞர் சங்கத்தின் ( All Arunachal Pradesh Divyangjan Youth Association) ஆண்கள் பிரிவின் தலைவர் கொன்யாங்தான் பல்வேறு மாற்றுத் திறனாளிகளின் முகவரிகளைக் கொடுத்தார். மேலும் பல்வேறு கிராமங்களில் உள்ள அவர்களது வீடுகளுக்கு செல்வதற்காக காது கேளாத ஏப்போ லியாக் (27) என்பவரின் ஸ்கூட்டரில் பைக்கில் சென்றார்.
 
ஆறு மாதங்களுக்கு முன்பு ஊனமுற்றோர் சங்கத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்ட ஏபோ, மற்ற ஊனமுற்றவர்களுக்கு, குறிப்பாக நடக்க குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, அவர்களின் சொந்த வேலை அல்லது வேலை வேட்டைக்கு தனது ஸ்கூட்டரில் அழைத்துச் செல்வதன் மூலம் உதவ எப்போதும் தயாராக இருக்கிறார். நாங்கள் அவரிடம் பேசியபோது, அடுத்த அறுவடைக்கு நெல் விதைக்க உதவிய பின்னர் அவர் தனது பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அவர்கள் சீன எல்லைக்கு அருகிலுள்ள மலைகளில் 250 கி.மீ தூரத்தில் வாழும் நெல் விவசாயிகள். ஏப்போ தனது மூத்த சகோதரி நன்னி, மைத்துனர் ஜோமோ மற்றும் சிறிய மருமகன் தாமோ ஆகியோருடன் இட்டாநகரில் வசிக்கிறார்.
 
ஏப்போவுக்கு மூன்று வயதாக இருந்தபோது அவருக்கு காது தொற்று ஏற்பட்டது. "ஒரு காதில் இருந்து சீழ் வெளியே வந்தது, காதுகுழாய் துளைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கூறினார்," என்று அவர் கூறுகிறார். அவர் ஒரு காதில் செவித்திறனை இழந்துள்ளார், மற்றொரு காதில் அவருக்கு சற்று செவிப்புலன் சக்தி இருந்தாலும், அது தொடர்ந்து ஒலிக்கும் சத்தத்தால் சிதைக்கப்படுகிறது. "10 அடிக்கு மேல் யாரும் பேசுவதை என்னால் கேட்க முடியவில்லை", என்று அவர் எங்களிடம் கூறுகிறார்.
 
அவர் படித்த கிராமத்துப் பள்ளியில், ஆசிரியர்கள் சொல்வதை சரியாக கேட்க முடியாமல் முடியாமல், பலகையில் எழுதப்பட்டதையே முழுமையாகச் சார்ந்திருந்தார். அதனால், அவர் பத்தாம் வகுப்பை முடித்திருந்தாலும், அவரது மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை.
 
ஏப்போ பண்ணைகள் மற்றும் கட்டுமான தளங்களில் வேலை செய்து தினசரி ஊதியம் பெறுகிறார். அவர் கலப்பையை பிடிக்காத போதோ, அல்லது விறகு வெட்டாதபோதோ, கூடைகளிலும் பிற பொருட்களிலும் நெசவு செய்யும் மூங்கிலை வெட்டுவதை நீங்கள் காட்டில் காணலாம். அரிசியை சேமித்து வைப்பதற்கான பெரிய கொள்கலன்கள், உமியில் இருந்து நெல்லை பிரிப்பதற்கான வின்னோவ்கள், கோழி கூடைகளாக செயல்படும் கூடைகள் என அவற்றின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மூங்கிலை வடிவமைத்து அதற்கேற்ப ரூ.300 முதல் ரூ.2500 வரை விலை நிர்ணயம் செய்கிறார். முழுநேர வேலை இல்லாத நிலையில், நண்பர்கள்  மூலம்தான் சிறுசிறு வேலைகளை பெறுகிறார்.
 
துரதிர்ஷ்டவசமாக, ஏப்போவால் இசையைக் கேட்க முடியவில்லை, ஏனெனில் அவர் earphones பயன்படுத்த முடியாது, ஆனால் அவர் தனது மொபைலில் வீடியோக்களைப் பார்க்கிறார், இருப்பினும் அவற்றைத் தெளிவாகக் கேட்க முடியாது (sub-titling முக்கியத்துவத்தை நிரூபிக்கும் மற்றொரு எடுத்துக்காட்டு). "எனக்கு காதலி இல்லை!" என்று அந்த இளைஞன் மிகவும் பரிதாபமாக எங்களிடம் கூறியபோது நாங்கள் நெகிழ்ந்து போனோம்.


புகைப்படங்கள்:

விக்கி ராய்