Icon to view photos in full screen

"ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து யாரையும் சார்ந்து இருக்காமல் இருப்பதே என்னுடைய நீண்ட நாள் ஆசை."

36 வயதான ஆதித்யா வீ. தான் முதல் முதலாக அமெரிக்கா செல்வதை பற்றி மிகவும் ஆர்வமாக இருந்தார். அவருடைய இளைய சகோதரர் அச்யுத் மிச்சிகன் மாநிலத்தில் கார் செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். அவர் ஆதித்யாவுடன் சுற்றுப்பயணம் செய்ய திட்டம் வகுத்து இருந்தார். இவர்களின் தாய் முதலிலேயே அமெரிக்காவிற்கு சென்று விட்டார். தந்தையும் ஆதித்யாவும் விரைவில் அமெரிக்கா செல்ல இருந்தனர்.
 
ஆனால் ஆதித்யாவிற்கு தன்னுடைய பணியை பற்றி சிறிது பயம் இருந்தது. தான் விடுமுறைக்கு சென்று வந்தால் தன் வேலை போய்விடுமா என்ற மன உளைச்சல் இருந்தது. விடுமுறை விண்ணப்பத்தை தான் பணி புரியும் Vindhya E-Infomedia நிறுவனத்தின் தலைவரான பவித்ரா கிரியிடம் கொடுத்தார். ஜூலை மாதம் திரும்பி வருவதாகவும், அமெரிக்காவில் ஏதாவது புதிதாக கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினார்.
 
பவித்ரா தன்னுடைய நிறுவனத்தில் மாற்று திறனாளிகளுக்கே அதிக வாய்ப்புகளை கொடுப்பதில் மிக பெருமிதம் கொள்கிறார். அதனால் ஆதித்யாவின் விண்ணப்பத்தை பார்த்தவுடன் புன்னகை பூத்தார் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை! அம்மாதிரி மாற்று திறனாளிகளில் ஆதித்யாவும் ஒருவர். ஆதித்யா borderline Intellectual Disability (ID) எனப்படும் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். அவர் தாயார் இந்த துறையில் தேர்ச்சி போற்றவர் என்பதால், மீண்டும் மீண்டும் ஒன்றையே செய்வது, ஓசை, கூட்டம், மென்மையான பொருள்களை தொடுவது போன்றவைகளை வெறுப்பது, மற்றும் அனைத்தும் ஒரே மாதிரி இருக்க வைப்பது போன்றவைகளை கொண்டு ஆதித்யாவிற்கு ஆட்டிசம் பாதிப்பும் இருப்பதாக ஊகித்தகார்.
 
ஆதித்யாவின் தந்தை C.S. வெங்கடராமு பத்ராவதி நகரில் உள்ள Visvesvaraya Iron and Steel Limited நிறுவனத்தில் பொறியாளராக பணி புரியும்போது ஆதித்யா பிறந்தார். அவர் குழந்தையாக இருக்கும்போது உற்சாகத்துடன் துள்ளி விளையாடிக்கொண்டு இருப்பார். மருத்துவர்கள் "இவன் அமூல் நிறுவனத்திற்கு விளம்பரமாக இருக்கலாம்" என வேடிக்கையாக கூறுவார்கள். போலியோ மூன்றாம் தடுப்பூசி விளைவித்த ஒவ்வாமையாலும், குளிர் சாதன பெட்டியில் வைக்காமல் கேட்டு போயிருந்த தட்டம்மை தடுப்பூசியாலும் பாதிக்கப்பட்டார். இதனால் வயதிற்கு ஏற்ப வளர்ச்சி கட்டங்களை அடையவில்லை. வேளையில் முன்னேறவும், இன்னும் சிறந்த மருத்துவ வசதி கிட்டவும், டில்லிக்கு குடி பெயர்ந்தனர்.  வெங்கடராமு கார்ப்பரேஷன் வங்கியில் பணியில் சேர்ந்தார். இதன் பின்னர், பெங்களூரில் இன்னும் வசதிகளும், வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன என்றறிந்து, அங்கு வேலை இடமாற்றம் பெற்று குடி பெயர்ந்தார்.
 
வணிக துறையில் பட்டம் பெற்ற கீதா Intellectual Disability (ID) பற்றி நன்கு தெரிந்து கொள்ள Spastics Society of Karnataka நிறுவனரும், இதனால் பாதிக்க பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆதரவு அளிக்கும் KPAMRC என்னும் நிறுவனத்தில் முக்கிய பங்காற்றும் ருக்மிணி கிருஷ்ணஸ்வாமி அவர்களை சந்தித்தார். அங்கே மன வளர்ச்சி குன்றுவது, மற்றும் கல்வி கற்பதில் குறைபாடு பற்றவைகளை பற்றி இரண்டு டிப்ளோமா படிப்பை முடித்தார். மேலும் சென்னை சென்று இஸ்ரேல் நாட்டு மனோ தத்துவ நிபுணர் ரூவேன் பியூர்ஸ்டீன் நடத்தும் Instrumental Enrichment programme என்ற பயிற்சியையும் முடித்தார்.
 
ஆதித்யா பல சிறப்பு பள்ளிக்கூடங்களில் சேர்ந்து பார்த்தாலும், ஒன்றும் சரி பட்டு வரவில்லை. திருமதி தங்கம் ராஜகோபாலன் நடத்தும் Dynam Vocational and Skill Training Centre மையத்தில் விண்ணப்பம் செய்தனர். 13 வயதான ஆதித்யா இங்கே இருப்பதிலேயே மிக இளையவர். 1999-2007 இவர் வாழ்க்கையில் ஒரு பொன்னான காலம். படிப்பில் மட்டுமின்றி, வாழ்க்கைக்கு தேவையான சமூக திறன்களிலும் பயிற்சி பெற்றார். இதன் பின்னர் மூன்று மாத கணினி பயிற்சியையும் முடித்தார். இதற்காக தனியாகவே பஸ்ஸில் செல்லும் பயிற்சியையும் பெற்றார். இவர் வாழ்க்கையில் நன்கு மிளிர இவர் சகோதரர் அச்யுத் மிக உதவியாக இருந்தார்.
 
அச்யுத் மற்றும் அவர் நபர்களும் கல்லூரிக்கோ மற்ற நிறுவனங்களுக்கோ செல்லும்போது அடையாள அட்டைகளை வண்ண கயிறுகளில் அணிந்து கொண்டு செல்வது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதே மாதிரி தானும் ஒரு நாள் அணிந்து செல்ல வேண்டும் என்று மிக விரும்பினார். இவர் கனவை நினைவாக்கியதற்காக இவர் பெற்றோர்களும், இவரும் பவித்ரா, அஷோக் கிரி, மற்றும் விந்தியா நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி செலுத்திகின்றனர். "விந்தியா நிறுவனம் ஆதித்யாவிற்கு மனதளவிலும், பணத்தாலும் யாரையும் சார்ந்து இருக்காமல் இருக்க உதவியது. இதனால் குடும்பத்திற்கும் மன நிம்மதியும் கிடைத்தது" என்று நன்றியுடன் கூறுகின்றனர் ஆதித்யாவின் பெற்றோர்கள்.
 
தன்னுடைய அன்றாட கால அட்டவணையை ஆதித்யா கூறுகிறார்: காலை 6 மணிக்கு எழுந்து தன் தந்தை கற்று கொடுத்த யோகா பயிற்சியை 6:45 வரை செய்து, 8:15 BMTC பேருந்து பிடித்து 15 கி. மீ தொலைவில் உள்ள தன் அலுவலகத்திற்கு 45 -60 நிமிடத்தில் அடைந்து சரியாக 9:30 மணிக்குள் உள்ளே சென்று பணியை துவங்கி, மதியம் 2 மணிக்கு வீட்டிலிருந்து கொண்டு வந்த சிற்றுண்டியைஉண்டு, 5:30 மணிக்கு கிளம்பி வீட்டிட்ற்கு சுமார் 6:45க்கு வந்து சேருவார். அலுவலகத்தில் இவர் HR Assistant ஆக பணி புரிகிறார். நேர்காணலுக்கு வரும் 15-20 பேரை வரவேற்று, உட்கார வைத்து, அவர்களின் ஆவணங்களை பரிசோதித்து தகுந்த நேர்காணல் செய்பவர்களிடம் அழைத்து சென்று விடுதல், மற்றும் பணியில் சேரும்போது செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து கொடுப்பது இவர் வேலை.  
 
ஆதித்யாவின் ஞாபக சக்தி அபாரமானது. விந்தியாவின் வாடிக்கையாளர்களின் பெயர்களை ஒன்று . Pensilon, C9, Bindo, Loyalty, Wipro Onsite, DotJob, Ujjivan, மற்றும் பற்பல பெயர்களை சரளமாக எடுத்து உரைக்கிறார். அது மட்டுமல்ல. தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் யார் யார் வந்தார்கள், என்னென்ன அன்பளிப்புகளை அளித்தார்கள் என்றெல்லாம் ஒன்று விடாமல் கூறுகிறார். இளம் வயதில் தம் தாய் நிம்மதியாக இருக்க கற்றுக் கொடுத்த விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலிசா போன்ற ஸ்தோத்ரங்களையும் நன்கு சொல்கிறார். தற்போது முழு பகவத் கீதையையும் மனப்பாடம் செய்து வருகிறார். 2 மற்றும் 18ம் அத்தியாயங்கள் ஏற்கனவே மனப்ப்பாடம் செய்து விட்டார்.
 
ஹைதராபாத் சகோதரர்கள், MS சுப்பலக்ஷ்மி, ஜேசுதாஸ் இவர்களின் பாடல்களை கேட்பது, CID, Kamala, Bade Achhe Lagte Hain போன்ற தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பது இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இதை தவிர,தினமும் 15 நிமிடங்களை சுடோகு போட்டு விடுகிறார்.
 
இவர் தாய் கீதா தானே மற்ற பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். "நான் பெற்ற கஷ்டங்களை வேறு யாரும் படக்கூடாது. அதனால் என் அனுபவங்களை மற்ற பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதனால் அவர்கள் பயணம் சற்றே எளிதாக ஆகும் என நம்புகிறேன் " என்று கூறுகிறார்.


புகைப்படங்கள்:

விக்கி ராய்